கொம்மாதுறை ஒருமுழச்சோலை ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலய 30வது ஆண்டு நிறைவு விழா

மட்டக்களப்பு கொம்மாதுறை மட்/ ககு/ ஒருமுழச்சோலை ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலய 30 வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு சாதனையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு வித்தியாலய அதிபர் திருமதி.ம.சுந்தரலிங்கம் அவர்கள் தலைமையில் நேற்றைய தினம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வின் போது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ. சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்திருந்தார். இந் நிகழ்வின் போது கல்வி, கலை, கலாச்சாரம், விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளிலும் தமது திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களும் அவர்களுக்கு உந்து சக்தியாக இருந்து வழிநடத்திய ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வின் போது கல்குடா வலய கல்வித்திட்டமிடல் பிரிவு பொறுப்பதிகாரி திரு.சி.துஷ்யந்தன், ஏறாவூர்பற்று கல்விக்கோட்ட, கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.ச.தட்சணாமூர்த்தி, விபுலானந்தா அறநெறிப்பாடசாலை தலைவர் கலாபூசணம்.திரு.த.சேனாதிராசா உட்பட அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் , பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் பழையமாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

எமது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதிச்செயலாளர் (இணைப்பாக்கம்) யோகராச சந்திரகுமார் அ

Video

திகிலிவெட்டை பிரதேசத்தில் உள்ளூர் உற்பத்தி மற்றும் கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்தும் மு

Video

கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட சேம்பையடி ஆற்றுக்குக் குறுக்காக பாலம் அ

Video

''சுபீட்சத்தின் நோக்கு உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்'' தேசிய வேலைத்திட்டத்திற்கமைவா