பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் - கோறளைப்பற்று வடக்கு வாகரை.

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவினுடைய பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது நேற்றைய தினம் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தன் அவர்கள் தலைமையில் இடம் பெற்றது.

குறித்த கூட்டத்தின்போது பல்வேறுபட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் அதற்கான தீர்மானங்களும் எடுக்கப்பட்டது. அந்தவகையில் தற்போது எமது நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியினைக் கருத்திற் கொண்டு எமது மாவட்டத்தில் உணவு உற்பத்தியை ஊக்குவிப்பதன் அடிப்படையில் நீண்ட காலமாக அதற்குத் தடையாக இருக்கும் வன வள திணைக்களத்திற்கு சொந்தமான காணிகள் தொடர்பான வர்த்தமானி தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் பொருளாதார ரீதியில் எமது மாவட்டத்திற்கு இலாபத்தை ஈட்டித்தரும் விவசாயம், மீன்பிடி, இறால் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு போன்றவற்றிற்கு வன வள காணிகள் தடையாக இருக்கும் இடங்களை அடையாளப்படுத்தி அக் காணிகளை வனவள வர்த்தமானியில் இருந்து விடுவிப்பது தொடர்பான தீர்மானமும், நாட்டின் மின் உற்பத்தியை கருத்திற்கொண்டு வாகரை புனானை கிழக்கு பிரதேசத்தில் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு தேவையான காணிகளையும் குறித்த வனவள காணிகளிலிருந்து ஒதுக்கீடு செய்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன் விசேடமாக கலந்துரையாடப்பட்டது.

மேலும் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் யானை தாக்குதலில் இருந்து மக்களையும், விவசாய நிலங்களையும் பாதுகாப்பது, வீதி அபிவிருத்திப் பணிகளை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவது, பாடசாலையில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்திசெய்வது, போதைப்பொருள் மற்றும் சட்ட விரோத மதுபான ஒழிப்பு,,காணியில்லாதவர்களுக்கனா காணிகளை வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எடுக்கப்பட்டது.

இதன்போது கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரன், இராசமாணிக்கம் சாணக்கியன், கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபை தவிசாளர் கௌரவ கண்ணப்பன் கணேசன் உட்பட கௌரவ பிரதச சபை உறுப்பினர்கள், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரின் செயலாளர் திரு. தம்பிராஜா தஜீவரன், பிரதேச செயலக அரச உத்தியோகத்தர்கள் , தனியார் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், சனசமூக நிலையங்கள், துறைசார் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் - 2024 தேசிய ரீதியில் நாடு முழுவதும் 22 தேர்தல் மாவட்டங்களிலும் பிரச்சார நடவடிக்

உலக வங்கியின் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக புனரமைக்கப்படவுள்ள வீதிகளின் பணிகளை

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான

தபால் மூல வாக்குகளை நாட்டின் சிறந்த தலைமைத்துவத்தை உருவாக்க வழங்க முன்வருமாறு அரச உத்தியோகத

அம்பாறை மல்வத்தை விபுலானந்த விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்து நடத்தியிருந்த மென்பந்து கிரிக்கெட் சு

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான