அமரர் செல்வி மனோகர் அவர்களின் ஓராண்டு நினைவஞ்சலி

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பணிக் குழு உறுப்பினரும் மகளிர் அணிச் செயலாளரும் முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான மதிப்புக்குரிய அமரர் செல்வி மனோகர் அவர்களின் ஓராண்டு நினைவஞ்சலி இன்றையதினம் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் ஒழுங்கு செய்யபட்டிருந்தது.

அன்னார் கட்சியின் ஆரம்ப காலம்தொட்டு இறுதி வரை கட்சியின் வளர்ச்சிக்காகவும் தலைவரின் வெற்றிக்காகவும் தன்னை முழுமையாக அர்ப்பணித்த தன்னலமற்ற ஒரு பெண்மணி ஆவார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலுள்ளவர்களுக்கெல்லாம் உயிராபத்து மற்றும் அச்சுறுத்தல் நிலவிவந்த காலப்பகுதியிலும் தானாக முன்வந்து தன்னை அர்ப்பணித்து பிரச்சார மேடைகளிலும் பொது வெளிகளிலும் கட்சியினை பற்றியும் கட்சித் தலைவர் பற்றியும் கம்பீரமாக எடுத்துரைத்து கட்சிக்கு என வலுவான மகளிர்அணியினையும் திரட்டிய வீரப் பெண்மணியுமாவார்.

இன்று கட்சி வளர்ந்து கிழக்கு மாகாணத்தில் ஆல விருட்சமாக நிற்க்கும் தருவாயில் கட்சியின் வெற்றிக்காக உங்களை அர்ப்பணித்து பல கஷ்டங்களை அனுபவித்த நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து சென்று இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்து விட்டது.

Video

ஏனைய செய்திகள்

Video

மட்டக்களப்பு வார் வீதியில் அமைந்துள்ள லூர்து அன்னை ஆலயத்தின் வருடாந்த திருப்பலி திருவிழாவை சிறப்ப

Video

இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க பிரதமரால் மட்டக்களப்பு பொது நூ

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் கோட்டைக்கல்லாறு தெற்கு கிராமசேகர் பிரிவில் உள்ள சிறுவர் ப