சர்வதேச தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு....

நிலையான உழைப்பால் நிறைவான உற்பத்தி காண்போம் என்ற தொனிப் பொருளிற்கமைவாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் மட்/தேவநாயகம் மண்டபத்தில் பல்வேறுபட்ட நிகழ்வுகள் வெகுவிமர்சையாக இடம்பெற்றது.

குறித்த நிகழ்வுகளின் போது கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டுமான வசதிகள் இராஜாங்க அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தனவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெவ்வேறு துறை சார்ந்த தொழிலாளர்களையும் தொழில் முயற்சியாளர்களையும் கௌரவிக்கும் முகமாக சான்றிதழ்களையும் நினைவுச்சின்னங்களையும் வழங்கிவைத்திருந்தார்.

அத்துடன் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான கௌரவ. பூபாலப்பிள்ளை பிரசாந்தன், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் கோறளைப்பற்று வடக்கு தவிசாளர் கௌரவ கண்ணப்பன் கணேசன், கோறளைப்பற்று தவிசாளர் கௌரவ சோபா ஜெயரஞ்சித், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பிரதி தலைவர் மதிப்பிற்குரிய கந்தையா யோகவேள், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தேசிய பொருளாளர் மதிப்பிற்குரிய ஆறுமுகம் தேவராஜா, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தொழிற்சங்க செயலாளர் மதிப்பிற்குரிய சோ.தியாகராஜா,தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மாவட்ட மகளிர் அணி இணைப்பாளர் சா.கிரிஸ்ரீனா, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மாவட்ட இளைஞர் அணி இணைப்பாளர் யோ.சந்திரகுமார் மற்றும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தொழிற்சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு

Video

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர

சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக

போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள

Video

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்