மட்டக்களப்பு மாவட்டத்தில் உற்பத்தி மற்றும் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்த தேவையான அரச காணிகளை வனவள துறையிடமிருந்து விடுவிப்பது தொடர்பிலான விசேட கூட்டம்

கடந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட ''மாவட்டத்தின் உற்பத்தி மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கென அடையாளம் காணப்பட்ட அரசகாணிகளை வனவள துறையிடம் இருந்து விடுவிப்பது'' தொடர்பான தீர்மானத்திற்கு அமைவாக இன்றையதினமும் கமத்தொழில் மற்றும் வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ. மஹிந்த அமரவீர அவர்களுடன் விசேட கூட்டம் ஒன்றினை இராஜாங்க அமைச்சர் கெளரவ சிவ.சந்திரகாந்தன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.

இதன்போது நாடுபூராகவும் உள்ள அரச காணிகளை பயன்படுத்தி உற்பத்தி மற்றும் விவசாய நடவடிக்கைகளை அதிகரிப்பதன் அவசியம் தொடர்பிலும் 2019 ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட வனவளத்துறை தொடர்பிலான வர்த்தமானியால் உற்பத்தி மற்றும் விவசாய துறையில் ஏற்பட்ட பின்னடைவுகள் தொடர்பிலும் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.

அதனடிப்படையில் எதிர்வரும் 3 வாரங்களுக்குள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான களவிஜயத்தினை முன்னெடுத்து மேற்குறித்த நோக்கங்களுக்கென அடையாளம் காணப்பட்ட காணிகளை வனவள துறையிலிருந்து விடுவிப்பது என்கின்ற தீர்மானமும் கௌரவ அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் எட்டப்பட்டது.

இதன் மூலம் பல நன்மைகளை எமது மாவட்டம் சந்திக்கும் என எதிர்பார்க்க படுகின்றது. குறிப்பாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மகிழடித்தீவு பகுதியில் சுமார் 380 ஏக்கருக்கும் அதிகமான இறால் வளர்ப்பு திட்டங்கள், மாவட்டத்தின் பல பாகங்களிலும் செய்கை பண்ணுப்படாதுள்ள 400 ஏக்கருக்கும் அதிகமான வயல் காணிகள், கோறளை பற்று வடக்கு, கோறளைப்பற்று தெற்கு ஆகிய பிரதேசசெயலக பிரிவுகளில் அமையவுள்ள மீன் மற்றும் இறால் வளர்ப்பு திட்டங்கள், என பல விவசாய மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவு ள்ளதாகவும், இதன்முலம் மாவட்டத்துக்கான வருமானத்தினை அதிகரிக்க முடிவதுடன் பல தொழில் முயற்சிகளையும் இளம் சந்ததியினருக்கு உருவாக்கி கொடுக்க முடியும் எனவும் கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சர் கருத்து தெரிவித்தார்.

இக்கூட்டத்தின் போது கமத்தொழில் மற்றும் வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சின் பிரத்தியேக செயலாளர், வன பாதுகாவலர் நாயகம், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், துறைசார் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த விடயம் தொடர்பில் கடந்த காலங்களிலும் பல சந்திப்புக்களை கௌரவ வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சருடன் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்

மட்டக்களப்பு கல்வி வலய எல்லைப்புற பாடசாலைகளான மஞ்சந்தொடுவாய் சாரதா வித்தியாலயம் மற்றும் கல்லடி வே

இளைஞர் சேவைகள் மன்றத்தினுடைய செயற்பாட்டினை மேம்படுத்துவது தொடர்பிலும் இளைஞர்களுக்கான தொழில் வாய்ப