பேத்தாளை கிராமத்தில் 1.5Km நீளமான வீதிகள் காபெட் வீதியாக செப்பனிடும் பணிகள் ஆரம்பம்!
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் அவர்களின் கருத்திட்டத்திற்கமைவாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக நீண்ட காலமாக செப்பனிடப்படாமல் காணப்படும் முக்கிய வீதிகளை இனம்கண்டு முன்னுரிமை அடிப்படையில் செப்பனிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் கோறளைப் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பேத்தாளை கிராம முருகன் கோயில் வீதி மற்றும் நூலக பின் வீதி உட்பட 1.5KM நீளமான உள்ளக வீதிகளுக்கான காபெட் இடும் பணிகளை நேற்றையதினம் இராஜாங்க அமைச்சர் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்திருந்தார்.
மேற்படி நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர் எந்திரி லிங்கேஸ்வரன் பிரதேச சபை செயலாளர் நவநீதன், கோறளைப் பற்று பிரதேச சபை முன்னாள் தவிசாளர் சோபா ஜெயரஞ்சித், பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலய அதிபர் கதிர்காமநாதன், பேத்தாழை விவேகானந்தா கல்லூரியின் ஓய்வு பெற்ற அதிபர் சந்திரலிங்கம், கட்சியின் பேத்தாழை கிராமியக் குழு தலைவர் சிவனேசதுரை அகிலகுமார் மற்றும் கட்சியின் கிராமியக் குழு செயலாளர் ஞானப்பிரகாசம், உட்பட வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.