மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ள வீதி அபிவிருத்தி பணிகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல்.

மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வீதி அபிவிருத்தி பணிகள் தொடர்பிலான விசேட கூட்டமானது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான கௌரவ பூபாலபிள்ளை பிரசாந்தன் அவர்கள் தலைமையில் நேற்றையதினம் மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது அப் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தினையும் சுயதொழிலினையைம் விருத்தி செய்யும் நோக்குடன் அப்பிரதேசத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வீதிகள் மற்றும் கிராமிய பாலங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

குறித்த நிகழ்வில் பிரதேச செயலாளர் திருமதி தெட்சன கெளரி, RDA எந்திரி குமரன் , உதவி திட்டமிடல் பணிப்பாளர் S.பிரபாகரன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் S.குகநாதன், பிரதேச குழு தலைவர் காமராஜன் , பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

ஏனைய செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் - 2024 தேசிய ரீதியில் நாடு முழுவதும் 22 தேர்தல் மாவட்டங்களிலும் பிரச்சார நடவடிக்

உலக வங்கியின் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக புனரமைக்கப்படவுள்ள வீதிகளின் பணிகளை

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான

தபால் மூல வாக்குகளை நாட்டின் சிறந்த தலைமைத்துவத்தை உருவாக்க வழங்க முன்வருமாறு அரச உத்தியோகத

அம்பாறை மல்வத்தை விபுலானந்த விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்து நடத்தியிருந்த மென்பந்து கிரிக்கெட் சு

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான