கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலய நூற்றாண்டு விழா

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலய நூற்றாண்டு விழாவானது வித்தியாலய அதிபர் S.அரசரெட்ணம் தலைமையில் நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த பாடசாலையில் கல்வி பயின்று கல்வி, கலை, கலாச்சாரம், விளையாட்டு என பல துறைகளிலும் தமது சாதனைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து அதிதிகளுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கும் நிகழ்வும் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்ததுடன் நூற்றாண்டு நினைவு மலர் " கதிராழி " யும் வழங்கிவைக்கப்பட்டிருந்தது.

மேலும் குறித்த பாடசாலையில் நிலவிவரும் பௌதீக மற்றும் மனிதவள தேவைகள் தொடர்பிலும், ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பிலும், நிர்வாக நடைமுறைகளில் காணப்படக்கூடிய திருப்தியின்மைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டிருந்தது.

இதன் போது அதிதிகளாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ சிவ .சந்திரகாந்தன், கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ A.அரவிந்தகுமார், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் கருணாகரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான கௌரவ. பூ.பிரசாந்தன், கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் ஆனந்தரூபன் உட்பட பிரதேச செயலாளர்கள், ஆசிரியர்கள், ஓய்வுநிலை அதிபர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

Video

ஏனைய செய்திகள்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவ

Video

சர்வதேச சைகை மொழி தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி!!

இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கான வெற்றிடம்