இளைஞர் சேவைகள் மன்றத்தினுடைய செயற்பாட்டினை மேம்படுத்துவது தொடர்பாக

இளைஞர் சேவைகள் மன்றத்தினுடைய செயற்பாட்டினை மேம்படுத்துவது தொடர்பிலும் இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புக்களை விஸ்தரிப்பது தொடர்பிலுமான விசேட கூட்டம்.

மேற்படி விடயம் தொடர்பில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தனின் வேண்டுகோளுக்கிணங்க இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட பணிப்பாளர் திருமதி. கலாராணி அவர்களின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் இக்கூட்டம் இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

குறித்த கலந்துரையாடலின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளைஞர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களை வலுப்படுத்துவது தொடர்பிலும் இளைஞர் சேவைகள் மன்றத்தின் எதிர்கால வேலைத்திட்டங்கள் மற்றும் தற்போது நடைமுறையில் உள்ள வேலைத்திட்டங்கள் போன்றவற்றை மேம்படுத்துவது தொடர்பிலும், இளைஞர் சேவைகள் மன்றம் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதன் போது எதிர்வரும் காலங்களில் ஜப்பான் நாட்டினால் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்களில் கூடுதலான இளைஞர்களை உள்வாங்குவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. அதற்கான மொழி அறிவினை விருத்தி செய்வது தொடர்பான விசேட பொறிமுறை ஒன்றும் உருவாக்கப்பட்டது. இக்கலந்துரையாடலில் போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலுமுள்ள இளைஞர் சேவைகள் மன்றத்தின் உத்தியோகத்தர்கள்,மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் இணைப்புச் செயலாளர்களான ஆ.தேவராஜ் , த. தஜீவரன் உட்பட துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவ.சந்திரகாந்தன் அவர்களின் ஆலோசனையின் பேரில் தலை

Video

சுடர் ஒளி விளையாட்டு கழகத்தின் கொம்மாதுறை பிரிமியர் லீக் (KPL) 2024 கிரிக்கெட் சுற்றுப் போட்டி நி

Video

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான