மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள 138 ஹெக்டேயர் மேட்டுநிலப் பயிர்ச்செய்கை நிலங்கள் தொடர்பில் ஆராயும் விசேட கள விஜயம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த அடைமழை காரணமாக முழுமையாகவும் பகுதியளவிலும் சுமார் 138 ஹெக்டேயருக்கு மேற்பட்ட மேட்டுநிலப் பயிர்ச்செய்கை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அப் பயிர்ச்செய்கையாளர்கள் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திரகாந்தனுக்கு முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக அப் பிரதேசங்களுக்கான கள விஜயத்தினை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூ.பிரசாந்தன் முன்னெடுத்திருந்தார். அத்துடன் பாதிக்கப்பட்ட பயிர்ச்செய்கை நிலங்கள் தொடர்பான கணக்கெடுப்புக்களையும், மதிப்பீடுகளையும் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

இதன்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதிச் செயலாளர் இணைப்பாக்கம் யோகராசா சந்திரகுமார் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Video

ஏனைய செய்திகள்