22.7 மில்லியன் செலவில் செப்பனிடப்பட்ட மண்முனை தென் எருவில்பற்று எருவில் கிழக்கு சிவபுர 1ம் மற்றும் 3ம் குறுக்கு வீதிகள்
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான கெளரவ சிவ.சந்திரகாந்தன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மாவட்டம் பூராகவும் பல வீதிகள் பரவலாக செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டு வருகின்றது.
அதன் தொடர்ச்சியாக மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவிலும் எருவில் கிழக்கு சிவபுரம் பகுதியில் 300m நீளமான 1ம் குறுக்கு வீதி மற்றும் 450m நீளமான 3ம் குறுக்கு வீதி போன்றன 22.7மில்லியன் செலவில் செப்பனிடப்பட்டு சம்பிரதாயபூர்வமாக நேற்றையதினம் இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தனால் திறந்துவைக்கப்பட்டிருந்தது.
இதன்போது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான கௌரவ. பூ.பிரசாந்தன்,வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியியலாளர் எந்திரி.பரதன், நிறைவேற்று பொறியியாலாளர் எந்திரி A.லிங்கேஸ்வரன், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் பிரத்தியேக செயலாளர் தம்பிராஜா தஜீவரன், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் திருநாவுக்கரசு, எருவில் கிராமிய அமைப்பாளர் உ.யோகுல் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், RDA உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.