ஆட்சியாளர்களை ஆதரிப்பது மக்களின் நலனுக்காகவே தவிர சுய நலனுக்காக அல்ல” கோகுலநாதன்

ஆட்சியாளர்களை நாம் ஆதரிப்பது பிரதேசத்தி்ல் தமிழர்களின் நலனுக்காகவே தவிர தனிப்பட்ட சொத்து சுகம் சேர்ப்பதற்காகவோ பரம்பரை சொத்தை பாதுகாப்பதற்காகவோ அல்ல என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ச. கோகுலநாதன் தெரிவித்தார்.

மண்முனைப்பற்று பிரதேச சபையின் புதிய உறப்பினராக நேற்றைய தினம் (23.09.2022) பதிவியேற்றுக் கொண்ட போது ஊடகங்களுக்கு அவர் வழங்கிய பிரத்தியேக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களுக்கும் பொதுச் செயலாளர் பூ. பிரசாந்தன் அவர்களுக்கும் எமது மண்முனை பற்று பிரதேசம் என்றும் கடமைப்பட்டுள்ளது.

மண்முனை பற்றில் அபிவிருத்தி நடைபெற்றது என்றால் அது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் ஆட்சி காலத்திலேயே ஆகும். இன்று பிரதேச சபைக்கு வந்தபோது நான் கவலைப்பட்டேன் மக்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய சபை உறுப்பினர்களின் வாதப்பிரதி வாத நிலைகண்டு இன்று பிரதேச சபையில் தவிசாளருக்கு நாம் ஆதரவு தெரிவிப்பது அவருக்கு காவடி தூக்குவதற்காகவோ அல்லது சுயநலனுக்காகவோ இல்லை.

மாறாக எமது மண்முனைப்பற்று பிரதேச மக்களின் நலன் கருதியே, என்று அவர் மக்கள் நலனுக்கு முறனாக செயற்படுகின்றாரோ அன்றே அவருக்கு நாம் வழங்கும் ஆதரவை விலக்கி கொள்வது மட்டுமல்ல ஜனநாயக ரீதியாக மக்களுக்காக போராடவும் தயங்கமாட்டோம்.

கடந்த கிழக்கு மாகாண சபை ஆட்சியில் எவ்வாறு தமிழர்களின் வாக்குகளை பெற்று 11 ஆசனங்களை வைத்துக் கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு 7 ஆசனங்களை மாத்திரம் வைத்துக்கொண்டிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் சோரம் போனது போன்ற நிலை மண்முனைப்பற்று பிதேசத்தில் கூட்டமைப்பினால் ஏற்படுத்தப்பட்டு மண்முனைபற்றில் தமிழர்களின் இருப்பு என்பது கேள்விக்குறி ஆகிவிடும் என்பதனையும் 72 வருடங்களாக வாய்ச் சவடல் அரசியல் மாத்திரம் செய்யும் இவர்களால் எதுவும் செய்யமுடியாமல் போகும் என்பதனையும் உணர்ந்து 2018 உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் சுயட்சைக்குழு உறுப்பினர் மகேந்திரலிங்கத்தினை தவிசாளராக அரசியல் சாணக்கியத்தின் மூலம் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் ஆதரவுடன் நேர்மையான அபிவிருத்தியினை மேற்கொள்வார் என கொண்டு வந்தோம் ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் அவரினை மிக மோசமாக வசைபாடி ஊழல்வாதி எனவும் நேர்மையற்றவர் எனவும் இரண்டு வரவு செலவு திட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து வரவு செலவு திட்டத்தினை தோற்கடிக்கச்செய்து ஆளுனர் வரை முறைப்பாடு செய்து பிரதேச சபையையும் குழப்பியடித்தனர் இதனால் புதிய தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.

இரண்டு வருடங்களாக தகுதியற்ற தவிசாளர் மகேந்திரலிங்கம் என்று ஆரையம்பதியைச்சேரந்த தவிசாளரை இல்லாமல் செய்தது யார்?என கேட்கவிரும்புகிறேன் தமிழ் தேசியக்கூட்டமைப்புதான் இந்த கைங்கரியத்தைச் செய்தது ஆனால் தமக்கு தவிசாளர் கிடைக்கவில்லை என்றவுடன் தகுதியற்றவர் என விலக்கப்பட்ட மகேந்திரலிங்கத்தினை தகுதியானவர் எனக்குறிப்பிடுகின்றனர் அப்படியானால் மகேந்திரலிங்கத்தின்மீது இவர்கள் சொன்ன குற்றச்சாட்டுக்கள் பொய்யானதா? அல்லது மக்களை ஏமாற்ற இப்போது இவர்கள் போடுவது நாடகமா? எனவும் கேட்க்கவிரும்புகிறேன்.

மகேந்திரலிங்கத்திற்கு எதிராக தற்போதைய தவிசாளர் தயானந்தனுடன் கூட்டமைத்து தமிழ் தேசியக்கூட்பமைப்பு அன்று கூத்தாடிவிட்டு இன்று தயானந்தன் தகுதியற்றவரா என்ன வேடிக்கை இது, தவிசாளர் தெரிவு 2018 இல் இடம்பெற்றபொது ஸ்ரீலங்கா முல்லீம் காங்கிறஸ் ஆதரவை தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆரையம்பதியில் பெற்றபோது இனவாதமில்லை தயானந்தன், கிரான்குளம் சூரியன் வேட்பாளர்,புதுக்குடியிருப்பு தினேஸ் (UNP)ஆதரவைக் கோரியபோது பிரதேச வாதம் இல்லை இப்போது எட்டிப் பார்த்து பழம் எட்ட வில்லை என்றவுடன் பழம் புழிக்குதா? நாம் மிகத் தெளிவாக இருக்கின்றோம் எம் மக்களுக்கு துரோகம் ஏற்படுத்த விளையும் எந்த செயற்பாட்டினையும் நாம் ஒரு போதும் ஆதரிக்கமாட்டோம். ஆரையம்பதி பொது மயானத்தினை சுவிகரிப்பதற்காக பிரதேச செயலகத்திற்கு ஒதுக்கபபட்டு வைப்பிலுள்ள நிதியினை மீளப்பெறுவதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது காரணம் இந்த சுவிகரிப்பு நடைமுறையை 2013ம் வருடம் 07ம் மாதம் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் கச்சேரியை மூடி ஆரப்பாட்டம் செய்து மயானக் காணியை சுபிகரித்து செயல் வடிவம் கொடுத்தவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியே என்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அதேவேளை நேற்று (23.09.2022) அப்பிரேரனை சபைக்கு விவாதத்திற்கு வரவில்லை அது மீழப்பெறப்பட்டுவிட்டது எனவும் குறிப்பிட்டார்.

ஏனைய செய்திகள்

Video

பரல் அமைப்பினரின் ஏற்பாட்டில் பெண் அரசியல் தலைமைத்துவங்களுக்கான பயிற்சிகளை முடித்துக் கொண்ட

தெற்காசிய கராத்தே சுற்றுப் போட்டியில் ( Kumite / fighting ) வெள்ளிப் பதக்கத்தை வென்று எமது மண்ணிற

கடந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட ''மாவட்டத்தின் உற்பத்தி மற்றும் விவசா

மட்டக்களப்பு கல்வி வலயமானது க. பொ.

மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட A வலயத்திற்கான பிரதேச குழு மற்றும் கிராமிய குழு தல