சாதனைகளுக்கு தடையாக சமூகச் சூழல்  அமையக்கூடாது பூ.பிரசாந்தன்

சாதனையாளர்கள் எந்தச் சூழலில் இருப்பினும் அச் சமூகச் சூழலை தமக்கு சாதகமாக்கி வெற்றிபெற வேண்டும் என்பதற்கு கட்டுமுறிவு மாணவிகள் ஓர் உதாரணமாகும் மாகாணமட்ட மகளிருக்கான உதைப்பந்தாட்டப் போட்டியில் வெற்றிவாகை சூடி தேசிய மட்டத்ததிற்குத் தெரிவாகிய ஆண்டான்குளம் கட்டுமுறிவு அரசினர் தமிழ் கலவன் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு எனது  எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். யுத்தத்தினாலும் வறுமையினாலும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட கோறளைப்பற்று வடக்கு பிரதேசத்திலுள்ள ஆண்டாள்குளம் அ.த.க. மகாவித்தியாலய பாடசாலை மாணவிகள் மாகாணமட்ட உதைபந்தாட்டப் போட்டியில் வெற்றியீட்டியுள்ளமை இன்று அனைவர் மத்தியிலும் ஒரு பேசும் பொருளாக மாறியுள்ளது அதற்கு உந்துசத்தியாக இருந்த ஆசிரியர்கள், பெற்றோர்கள், பயிற்றுவிப்பாளர்கள் குறிப்பாக பாடசாலை அதிபர் உள்ளிட்ட அனைவரும் பாராட்டப்படவேண்டியவர்கள் “ அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பெதற்கு” என்ற பேடித்தனமான மூடத்தன  சிந்தனைக்கு இன்று கட்டுமுறிவிலிருந்து  சரியான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

வளங்கள் கொட்டிக்கிடக்கும் பலரும் இவ் வெற்றி இலக்கை அடைவதற்கு  போராடிக் கொண்டிருக்கும் போதும்  மைதானம், சீருடை, பயிற்றுவிப்பாளர் என  வளப்பற்றாக்குறையுடன் சாதித்துக்காட்டிய மாணவிகளின் மனதிடத்தினை தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் சார்பாகவும் கட்சியின் சார்பாகவும், பாராட்டுவதுடன் இவ் மாணவிகள் தேசிய ரீதியில் பங்குபற்றி வெற்றியீட்டி பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

மட்டக்களப்பு மாவட்டம் தன்னகத்தே திறமையான பல இளைஞர் யுவதிகளை கொண்டுள்ளபோதும் அவர்களின் சாதனை இலக்குகளுக்கு  கடந்த 72 வருட அரசியல்பாதை உரம் சேர்க்கவில்லை என்ற ஏக்கம் எல்லோரிடமும் மண்டிக்கிடக்கின்றது. எனினும் காலம் காலமாக விட்ட தவறுகளை சுட்டிக்காட்டிக்கொண்டு காலத்தை வீணடிக்கும் அரசியல் கலாசாரத்திற்கு அப்பால் மிகவிரைவில் மாவட்டத்தின் கல்வி, கலை கலாசார, விளையாட்டு, பொருளாதார துறைகளில் எதிர்காலத்தில் தலை நிமிர்ந்து வாழக்கூடிய சூழலை மட்டக்களப்பு மாவட்டத்திலும் கிழக்கிலும் ஏற்படுத்த தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் பயணிப்போம் என்பதில் எவ்வித மாற்றமுமில்லை.

ஏனைய செய்திகள்

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் ,கிழக்கின் முதல் முதலமைச்சருமான கெளரவ சிவநேசதுரை

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்தக்கூட்டம் தமிழ்

ஆட்சியாளர்களை நாம் ஆதரிப்பது பிரதேசத்தி்ல் தமிழர்களின் நலனுக்காகவே தவிர தனிப்பட்ட சொத்து சுகம் சே

பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜிற்கு எதிராக பெண்கள் ஒன்றியம் இணைந்து நடாத்திய பாரிய கண்