மட்டக்களப்பு மாவட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வருடம் செய்கை பண்ணப்படவுள்ள 1, 95, 000ற்கும் அதிகமான ஏக்கர் வயல் காணிகளில் பெரும்போக நெற் செய்கையில் ஈடுபடவுள்ள விவசாயிகளுக்கு தமது விவசாய நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொள்வதிலுள்ள சவால்கள் மற்றும் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் முகமாக இக்கூட்டம் அமைந்திருந்தது.

அதன்போது விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் தமது பெரும்போக செய்கைக்கு தேவையான உரத்தினை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு போதிய அளவு கிடைக்கப் பெறச் செய்யவேண்டும் என்ற கோரிக்கையினையும் அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரம் உட்பட பதிவு செய்யப்படாத விவசாயிகளுக்கான உரங்கள் மற்றும் அவர்களுக்கான களை நாசினிகள், கிருமி நாசினிகள் போன்றவற்றையும் நிர்ணய விலைகளில் கமநல கேந்திர நிலையங்களினூடாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய இராஜாங்க அமைச்சருமான சிவ. சந்திரகாந்தன் அவர்களிடம் முன்வைத்திருந்தனர். அது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் உடனடியாக கலந்துரையாடி அதற்கான தீர்வுகளை பெற்றுத்தருவதாக விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு உத்தரவாதமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் நேரடியாகவே அரசாங்க அதிபர் மற்றும் விவசாய உதவிப் பணிப்பாளர் ஆகியோருடன் தொடர்புகளை மேற்கொண்டு இவ்விடயங்கள் தொடர்பிலான விசேட கூட்டத்தினை அரசாங்க அதிபர் தலைமையில் மிக விரைவாக ஒழுங்கு செய்யுமாறும் இவ்விடயங்கள் குறித்து வெளிப்படையாக அனைத்து விடயங்களையும் விவசாயசங்கங்களின் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்துமாறும் அறிவுறுத்தியிருந்தார்.

ஏனைய செய்திகள்

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் ,கிழக்கின் முதல் முதலமைச்சருமான கெளரவ சிவநேசதுரை

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்தக்கூட்டம் தமிழ்

ஆட்சியாளர்களை நாம் ஆதரிப்பது பிரதேசத்தி்ல் தமிழர்களின் நலனுக்காகவே தவிர தனிப்பட்ட சொத்து சுகம் சே

பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜிற்கு எதிராக பெண்கள் ஒன்றியம் இணைந்து நடாத்திய பாரிய கண்