பிரதேச செயலாளரை கீழ்த்தரமான வார்த்தைகளால் வசை பாடிய பிரதேச சபை உறுப்பினருக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணி கண்டனம்

15.09.2022ம் திகதி நடைபெற்ற மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபை அமர்வில் பிரதேசசபையின் உறுப்பினரொருவர் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்களை மிக கீழ்த்தனமான வார்த்தைகளால் வசை பாடியமையினை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணி வன்மையாக கண்டிக்கின்றது. 

அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுக்கள் இருப்பின் அது தொடர்பாக கருத்து தெரிவிப்பதற்கும் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கும் சாதாரண பொது மக்கள் தொடக்கம் மக்கள் பிரதிநிதி வரை பூரண சுதந்திரம் உண்டு. மாறாக தகாத வார்த்தைகளால் விமர்சிப்பதற்கோ மிக கீழ்த்தரமாக  சட்டத்திற்கு முரணாக நடந்து கொள்வதற்கும் யாருக்கும் உரிமை கிடையாது. இலங்கை நிர்வாக சேவையில் உள்ள பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்களை  மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபை அமர்வில் அரசியல் கட்சி ஒன்றினை  பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர் ஒருவர் மிகக் கீழ்த்தரமான வார்த்தைகளால் வசைபாடியிருந்தார்.  பெண் தலைமைத்துவத்தை தரக்குறைவாக தகாத வார்த்தைகளால் வசைபாடியமையானது ஒட்டுமொத்த பெண் சமூகத்தினையும் இழிவுபடுத்தும் செயற்பாடாக அமைகிறது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் உள்ள எமது பெண் சமூகம் தலைமைத்துவத்தினை ஏற்க முன்வரும் போது அதற்கு வழிசமைத்து கொடுக்க வேண்டிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இவ்வாறு பெண் தலைமைத்துவத்தின் மீது சேறு பூசி ஓரங்கட்ட முற்படுவது கண்டிக்கப்பட வேண்டியதும் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டியதுமானதாகும். என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணி குறிப்பிட்டுள்ளது.

ஏனைய செய்திகள்

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் ,கிழக்கின் முதல் முதலமைச்சருமான கெளரவ சிவநேசதுரை

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்தக்கூட்டம் தமிழ்

ஆட்சியாளர்களை நாம் ஆதரிப்பது பிரதேசத்தி்ல் தமிழர்களின் நலனுக்காகவே தவிர தனிப்பட்ட சொத்து சுகம் சே

பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜிற்கு எதிராக பெண்கள் ஒன்றியம் இணைந்து நடாத்திய பாரிய கண்