மீனவர்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்த முதலை இன்றையதினம் அகப்பட்டது

கோட்டைக்கல்லாறு, பெரியகல்லாறு, நீர் நிலைகளில் மீனவர்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்தமுதலையை பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு மண்முனை தென் எருவில்பற்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் கௌரவ த. சுதாகரன் கட்சியின் கௌரவ செயலாருக்கு விடுத்த வேண்டுகோளிற்கு அமைய அம் முதலையினை பிடிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மீன்பிடியை ஜீவனோபாயத் தொழிலாக கொண்டுள்ள கோட்டைக்கல்லாறு,பெரியகல்லாறு பகுதியில் சுமார் 250 மீனவ குடும்பங்கள் நீர் நிலைகளை நம்பி வாழும் நிலையில் கடந்த ஒரு வார காலமாக சுமார் 4 மீனவர்கள் முதலை கடிக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

குறித்த நீர் நிலைகளில் மீன் பிடிக்கச் செல்வோருக்கு பெரும் அச்சுறுத்தலாக முதலை மாறியுள்ளதனை கட்சியின் பொதுச் செயலாளர் பூ. பிரசாந்தன் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தனின் கவனத்திற்கு கொண்டுசென்றதனை தொடர்ந்து வனஜீவராசிகள் மாவட்ட பணிமனை அதிகாரிகளின் மேற்பார்வையுடன் குறித்த பகுதி

மீனவர்களின் பங்களிப்புடன் இன்றைய தினம் அம்முதலை பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் அதிகாரிகளினால் எடுத்துச்செல்லப்பட்டது.

ஏனைய செய்திகள்

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் ,கிழக்கின் முதல் முதலமைச்சருமான கெளரவ சிவநேசதுரை

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்தக்கூட்டம் தமிழ்

ஆட்சியாளர்களை நாம் ஆதரிப்பது பிரதேசத்தி்ல் தமிழர்களின் நலனுக்காகவே தவிர தனிப்பட்ட சொத்து சுகம் சே

பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜிற்கு எதிராக பெண்கள் ஒன்றியம் இணைந்து நடாத்திய பாரிய கண்