மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாண திணைக்களத்தில் இராஜாங்க அமைச்சரின் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாண திணைக்களத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் ,முன்னாள் முதலமைச்சருமான கெளரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது

குறித்த கலந்துரையாடலில் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்து உள்ளூர் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக எதிர்காலத்தில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது.

இதன்போது வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் சிவகுமார், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் பரதன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் லிங்கேஸ்வரன் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தேசிய பொருளாளர் ஆ.தேவராசா, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளர் த.தஜீவரன் உட்பட ஏனைய பொறியியலாளர்கள், மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஏனைய செய்திகள்

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் ,கிழக்கின் முதல் முதலமைச்சருமான கெளரவ சிவநேசதுரை

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்தக்கூட்டம் தமிழ்

ஆட்சியாளர்களை நாம் ஆதரிப்பது பிரதேசத்தி்ல் தமிழர்களின் நலனுக்காகவே தவிர தனிப்பட்ட சொத்து சுகம் சே

பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜிற்கு எதிராக பெண்கள் ஒன்றியம் இணைந்து நடாத்திய பாரிய கண்