சிவப்பு சித்திரை 18 வது ஆண்டு நினைவு தினம்

சிவப்பு சித்திரை 18 வது ஆண்டு நினைவு தினம்.

2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ம் திகதியன்று அதிகாலை வேளையில் வெருகலாற்றங்கரையில் வைத்து படுகொலைசெய்யப்பட்ட கிழக்கு போராளிகளை நினைவு கோரும் முகமாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பினால் வருடா வருடம் ஒழுங்கு செய்து நாடாத்தப்படும் சிவப்பு சித்திரை தினமான நேற்றையதினத்தன்று (10/04/2022) விளக்கேற்றி மலர்தூபி அஞ்சலி செலுத்தியபோது...

குறித்த இந் நினைவுதின நிகழ்வுகளின் போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான கெளரவ. சிவநேசதுரை சந்திரகாந்தன் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சிரேஷ்ட்ட பிரதித் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கௌரவ. நாகலிங்கம் திரவியம், , தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கௌரவ. பூ.பிரசாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதித் தலைவர் க.யோகவேள், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொருளாளர் மதிப்பிற்குரிய ஆறுமுகம் தேவராஜா மற்றும் , கோறளைப் பற்று வடக்கு வாகரை தவிசாளர் கௌரவ. கண்ணப்பன் கணேசன், கோறளைப் பற்று பிரதேச சபை தவிசாளர் கௌரவ. திருமதி. சோபா ஜெயரஞ்சித் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் உயிர் நீத்த உறவுகளின் பெற்றோர்கள் சகோதர சகோதரிகள் பொதுமக்களென பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

Video

ஏனைய செய்திகள்

Video

சித்தாண்டி வந்தாறுமூலை பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களின் பிரதான வடிசல் வாய்க்காலாக திகழும் செம்பித்

இன்றைய சிறார்கள் எதிர்கொள்ளும் சவால்களாக பொருளாதாரம் மற்றும் போசாக்கின்மை போன்றன காணப்படுகின்ற போ

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் ,கிழக்கின் முதல் முதலமைச்சருமான கெளரவ சிவநேசதுரை