எல்லைப் புற கிராமங்களை அபிவிருத்தி செய்யும் பயணத்தின் தொடர்ச்சி....

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் புற கிராமங்களை விருத்தி செய்யும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சியின் பயணத்தின் தொடர்ச்சியாக நேற்றைய தினம் கோறளைப் பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட முறுத்தானை, அக்குறானை, மினுமினுத்தவெளி போன்ற பிரதேசங்களுக்கு கள விஜயத்தினை மேற்கொண்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான கெளரவ சிவநேசதுரை சந்திரகாந்தனவர்கள் அக் கிராமங்களின் குறை நிறைகள் தொடர்பாகவும், மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டதுடன் அவற்றில் உடனடியாக தீர்வு காணக்கூடிய பிரச்னைகளை இனம் கண்டு அதற்கான தீர்வுகளை அவ்விடத்தில் வைத்தே வழங்கி வைத்திருந்தார். அத்துடன் அப் பிரதேசத்திலுள்ள மக்களின் விவசாயம் மற்றும் உற்பத்தியினை அதிகரிக்கும் திட்டங்கள் தொடர்பிலும் விளைபொருட்களை இலகுவாக எடுத்துச் சென்று சந்தைப்படுத்தும் வழிமுறைகள் தொடர்பிலும் அதற்கான பாதை விஸ்தீரணம் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடியிருந்தார். அத்தோடு பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், வறிய குடும்பங்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்கள் தொடர்பிலும் அப் பகுதியில் காணப்படக் கூடிய தோர்ந்து போயுள்ள குளங்களை புனரமைத்து அப் பிரதேசத்திற்கான விவசாயத்தினையும் கால்நடை வளர்ப்பினையும் மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலும் அக்குறானை பிரதேசத்திற்கான கல்வி மேம்பாட்டுத்திட்டங்கள் தொடர்பிலும் அப்பிரதேசத்திலுள்ள பாரதி வித்தியாலயத்தின் குறை நிறைகள், பௌதீக வளங்கள், ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பிலும் அதற்கான தீர்வுத் திட்டங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டு அதனை முடிந்த வரை விரைவாக நிவர்த்தி செய்ய தேவையான வழிமுறைகளும் இனங்காணபட்டது. மேலும் எல்லை புற கிராமங்களிலுள்ள ஆலயங்களை விருத்தி செய்து அம் மக்களின் பாரம்பரிய கலாசாரங்களை பேணிப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் உள்ளடங்கலான பல விடயங்கள் தொடர்பிலும் அதற்கான தீர்வுத் திட்டங்கள் தொடர்பிலும் கெளரவ தலைவர் உரிய அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தியிருந்தார்.

Video

ஏனைய செய்திகள்

Video

சித்தாண்டி வந்தாறுமூலை பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களின் பிரதான வடிசல் வாய்க்காலாக திகழும் செம்பித்

இன்றைய சிறார்கள் எதிர்கொள்ளும் சவால்களாக பொருளாதாரம் மற்றும் போசாக்கின்மை போன்றன காணப்படுகின்ற போ

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் ,கிழக்கின் முதல் முதலமைச்சருமான கெளரவ சிவநேசதுரை