பொது நிகழ்வுகள்

Views
ஆரம்ப நேரம் நிகழ்வு இடம்
சர்வதேச தொழிலாளர் தினமானது இராஜாங்க அமைச்சரின் பங்குபற்றலுடன் நடைபெறவுள்ளது

" நீ விதைத்த வியர்வை துளிகளால் தான் கல்லாய் கிடந்த இந்த பூமிப்பந்து கர்ப்பம் தரித்து உயிர்ப்பித்திருக்கிறது.................. " என்ற தொனிப் பொருளுக்கு அமைவாக சர்வதேச தொழிலாளர் தினமானது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொழிற்சங்கத்தினால் எதிர்வரும் 01.05.2022 ஞாயிற்றுக் கிழமையன்று பிற்பகல் 3.00 மணியளவில் மட்/ தேவநாயகம் மண்டபத்தில் இராஜாங்க அமைச்சர் கெளரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பங்குபற்றலுடன் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு
இனிய தமிழ் சிங்கள புதுவருட நல்வாழ்த்துக்கள்

கௌரவ தலைவர் சிவ.சந்திரகாந்தன் அவர்கள் தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு வாழ்த்துச் செய்தி தெரிவிக்கவுள்ளார்

மட்டக்களப்பு
220 பயனாளிகளுக்கு வாழ்வாதாரத்தினை அதிகரிக்கும் முகமாக கைத்தொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளது

வாழ்வாதாரத்தினை அதிகரிக்கும் முகமாக கைத்தொழில் உபகரணங்கள் கௌரவ தலைவர் சிவ.சந்திரகாந்தன் அவர்களினால் 220 பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்படவுள்ளது

மட்டக்களப்பு
வெருகல் படுகொலை நினைவு நாள்

2004 சித்திரை மாதம் 10ஆம் திகதி இடம்பெற்ற வெருகல் படுகொலை நினைவு நாளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது வருடாவருடம் 'வெருகல் மலை மக்கள் பூங்காவில் சிவப்பு சித்திரை’ என்கின்ற பெயரில் நினைவுகூர்ந்து வருகின்றது. அந்த வகையில்  இந்தவருடமும் அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு
மட்/புதூர் விக்னேஸ்வரா வித்தியாலய விளையாட்டு மைதான புனரமைப்பு (04.04.2022)

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட  மட்/புதூர் விக்னேஸ்வரா வித்தியாலய மைதானம் புனரமைப்பு செய்யப்படவுள்ளது.  இந் நிகழ்வானது (04.04.2022) அன்று  சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு
மண்முனை மேற்கு வவுனதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விளையாட்டு மைதான புனரமைப்பு (04.04.2022)

மண்முனை மேற்கு வவுனதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட   கரையாகன்தீவு பாடசாலை விளையாட்டு மைதானமும், காஞ்சிரங்குடா Ten Star விளையாட்டு கழக மைதானமும் நாற்பது இலட்சம் ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்படவுள்ளது. இந் நிகழ்வானது  (04.04.2022) அன்று  சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு
கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டு மைதான புனரமைப்பு (04.04.2022)

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட  கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டு மைதானமானது புனரமைப்பு செய்யப்படவுள்ளது. அத்துடன் இரண்டு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மைதானத்திற்கான மின்னொளி கட்டமைப்பு வசதிகளும் செய்யப்படவுள்ளது. இந் நிகழ்வானது  (04.04.2022) அன்று  சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு
பாலயடித்தோணா கடலூர் கடற்கன்னி விளையாட்டு மைதான புனரமைப்பு (04.04.2022)

கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட  பாலயடித்தோணா கடலூர் கடற்கன்னி விளையாட்டு மைதான  புனரமைப்பானது  கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் கௌரவ சோபா ஜெயரஞ்ஜித், கோறளைப்பற்று பிரதேச செயலாளர்,கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் கௌரவ மனிசேகரம் மற்றும் நடராசா  அவர்களினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு
மட்/பட்/மகிழூர்முனை சக்தி வித்தியாலய விளையாட்டு மைதான புனரமைப்பு (04.04.2022)

மண்முனை தென் எருவில் பற்று  பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட  மட்/பட்/மகிழூர்முனை சக்தி  வித்தியாலய மைதானம் புனரமைப்பு செய்யப்படவுள்ளது. இந் நிகழ்வானது  (04.04.2022) அன்று  சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு
ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கு விளையாட்டு மைதான புனரமைப்பு (04.04.2022)

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட  ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கு விளையாட்டு மைதான  புனரமைப்பானது  தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான கௌரவ. பூபாலபிள்ளை பிரசாந்தன் அவர்களினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு