மாவட்ட விவசாய அபிவிருத்தியில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பங்கு...

மாவட்ட விவசாய அபிவிருத்தியில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பங்கு...

இன்று கிழக்கு பல்கலைக்கழகமானது பல்வேறு வளங்களையும் புத்திஜீவிகளையும் கொண்ட ஒரு சொத்தாககாணப்படுகின்றது. இந்த வகையில் எமது தேர்தல் விஞ்ஞாபனதிற்கு அமைவாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் விவசாயபீடத்தினை எவ்வாறு எமது மாவட்டத்தின் விவசாய அபிவிருத்திக்கு பயன்படுத்துவது என்கின்ற தொனிப்பொருளில் இன்று கிழக்குபல்கலைக்கழக விவசாயபீடத்தில் விசேட கூட்டமொன்று கௌரவ தலைவர் சி.சந்திரகாந்தன் அவர்களால்ஒழுங்கு செய்யப்பட்டது. இதில் அரசாங்க அதிபர்,பல்கலைக்கழக உபவேந்தர்,விவசாயத் திணைக்களத்தின்உதவி ஆணையாளர் மற்றும் விவசாய பீடத்தின் பீடாதிபதி உட்பட பல அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இதன்போது கௌரவ தலைவர் தனது நோக்கத்தினை அவர்களுக்குதெளிவாக விளக்கினார் அதில் குறிப்பாக மாவட்டத்தின் விவசாய விருத்திக்கு கிழக்குப்பல்கலைக்கழகவிவசாய பீடத்தின் பூரணபங்களிப்பினை உறுதிசெய்வது, விவசாய பீடத்தின் மூலமாக புதிய ஆய்வுகளையும்புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதன் மூலமாக உற்பத்தியினை அதிகரிப்பது,விவசாயிகளும் விவசாயத்திணைக்களமும் கிழக்கு பல்கலைக்கழக விவசாய பீடத்துடன் இணைந்து செயற்படக்கூடிய சூழலை ஏற்படுத்திவிவசாயத் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தி மாவட்டத்தின் பொருளாதாரத்தினை அதிகரிப்பது போன்ற பலதிட்டங்கள் அங்கு ஆராயப்பட்டது அதில் குறிப்பாகவேளாண்மை,நிலக்கடலை,மரமுந்திரிகை,தென்னை,சோளன் பயிற்செய்கை பொன்றவை சம்பந்தமாகவும் பலதிட்டங்கள் முன்வைக்கப்பட்டது.இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து அதிகாரிகளும் மிகுந்த ஆர்வத்துடனும்விருப்பத்துடனும் தங்களது கருத்துக்களை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது....

Video

ஏனைய செய்திகள்

Video

சித்தாண்டி வந்தாறுமூலை பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களின் பிரதான வடிசல் வாய்க்காலாக திகழும் செம்பித்

இன்றைய சிறார்கள் எதிர்கொள்ளும் சவால்களாக பொருளாதாரம் மற்றும் போசாக்கின்மை போன்றன காணப்படுகின்ற போ

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் ,கிழக்கின் முதல் முதலமைச்சருமான கெளரவ சிவநேசதுரை