எமது மண்ணின் 100,000 ற்கு மேற்பட்ட சரித்திர ஆவணங்களை பாதுகாத்தல்.

நூலக வேலைகளில் இன்னுமொரு மாடிதொடரை மேலதிகமாக அமைத்தலும், எமது மண்ணின் 100,000 ற்கு மேற்பட்ட சரித்திர ஆவணங்களை பாதுகாத்தலும்.
கௌரவ தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் எண்ணக்கருவில் அன்று உதித்த இலங்கையினுடைய மாபெரும் நூலகத்தினை எமது மட்டுமண்ணில் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தில் ஏற்கெனவே இரண்டு மாடி தொடர்கள் கொண்டு அமைக்கப்படுகின்றது.
இந் நிலையில் தற்போது அதனை வெறுமனே நூலகமாக மட்டுமல்லாமல் அதனுடன் இணைந்து எமது மண்ணின் மகிமையை இவ்வுலகிற்கு பறைசாற்றக் கூடிய ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட சரித்திர ஆவணங்களை பாதுகாக்கும் வகையில் மேலும் ஒரு மாடி தொடரனையும் அதனோடு இணைந்த தொழில்நுட்ப ரீதியானவேலைத்திட்டங்களையும் முன்னெடுப்பதற்கான தீர்மானங்களும் இதற்கான நிதியினை கொண்டு வருகின்ற திட்டத்தினையும் உள்ளடக்கிய விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று நூலக வளாகத்தில் இடம்பெற்றது.
இதன் அடிப்படையில் பல்வேறுபட்ட ஆவணங்களையும்,தொன்மையான நூல்களையும் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் முதியவர்கள் என அனைவரும் விரும்பி பயன்படுத்தக்கூடிய இலங்கையிலேயே ஒரு பிரமாண்டமான நூலகத்தை அமைத்து அதனை அவரது தேர்தல் விஞ்ஞாபனதில் குறிப்பிட்டதற்கு அமைவாக மக்கள் பாவனைக்கு மிக விரைவில் வழங்கவுள்ளார்.

Video

ஏனைய செய்திகள்

Video

சித்தாண்டி வந்தாறுமூலை பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களின் பிரதான வடிசல் வாய்க்காலாக திகழும் செம்பித்

இன்றைய சிறார்கள் எதிர்கொள்ளும் சவால்களாக பொருளாதாரம் மற்றும் போசாக்கின்மை போன்றன காணப்படுகின்ற போ

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் ,கிழக்கின் முதல் முதலமைச்சருமான கெளரவ சிவநேசதுரை