மாவிலங்கு துறை விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் களவிஜயம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாவிலங்கு துறை பிரதேசத்தில் அமைந்துள்ள மாவிலங்கு துறை விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான கெளரவ பூபாலப்பிள்ளை பிரசாந்தன் அவர்கள் நேற்றையதினம் களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

குறித்த களவிஜயமானது வித்தியாலய அபிவிருத்திக் குழுவின் வேண்டுகோளுக்கிணங்க இராஜாங்க அமைச்சர் சிவ. சந்திரகாந்தனின் பணிப்புரைக்கு அமைவாக இடம்பெற்றிருந்தது. இதன்போது பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பாகவும் , பெளதீக வளங்கள் மற்றும் பாடசாலையின் குறைபாடுகள் குறிப்பாக ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

குறித்த கலந்துரையாடலின் போது அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திக்கு குழு உறுப்பினர் என பலரும் கலந்துகொண்டனர்.

ஏனைய செய்திகள்

Video

பரல் அமைப்பினரின் ஏற்பாட்டில் பெண் அரசியல் தலைமைத்துவங்களுக்கான பயிற்சிகளை முடித்துக் கொண்ட

தெற்காசிய கராத்தே சுற்றுப் போட்டியில் ( Kumite / fighting ) வெள்ளிப் பதக்கத்தை வென்று எமது மண்ணிற

கடந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட ''மாவட்டத்தின் உற்பத்தி மற்றும் விவசா

மட்டக்களப்பு கல்வி வலயமானது க. பொ.

மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட A வலயத்திற்கான பிரதேச குழு மற்றும் கிராமிய குழு தல