துயரத்தில் பங்கு கொள்ளல்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர் முத்து சிவலிங்கம் அவர்களின் மரணச் செய்தி கேட்டு துயரமடைந்தோம்.

மலையகத் தொழிலாளர்கள் ஒடுக்கப்படும் போதெல்லாம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் கொள்கைகளுக்கு ஏற்ப திடமாக நின்று குரல் கொடுத்து அரசியலில் மிகவும் சிரேஷ்ட நிலையிலிருந்து மலையக தமிழர்களின் நிலைபேறான அபிவிருத்திக்கு அரும்பாடுபட்ட அகல் விளக்கு இன்று அணைந்துள்ளது. இந்நிலையிலிருந்து சுதாகரித்து அமரர் முத்து சிவலிங்கம் போன்ற அனுபவம் மிக்க நிதானமான போக்குடன் தொடர்ந்து பயணிப்பதுவே காலத்தின் தேவையாகவும் உள்ளது.

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தார் மற்றும் உற்றார், உறவினர்கள் ,நண்பர்கள் அனைவருக்கும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும், கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் சார்பாகவும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரின் ஆத்மா சாந்திக்காகவும் இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

ஏனைய செய்திகள்

Video

பரல் அமைப்பினரின் ஏற்பாட்டில் பெண் அரசியல் தலைமைத்துவங்களுக்கான பயிற்சிகளை முடித்துக் கொண்ட

தெற்காசிய கராத்தே சுற்றுப் போட்டியில் ( Kumite / fighting ) வெள்ளிப் பதக்கத்தை வென்று எமது மண்ணிற

கடந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட ''மாவட்டத்தின் உற்பத்தி மற்றும் விவசா

மட்டக்களப்பு கல்வி வலயமானது க. பொ.

மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட A வலயத்திற்கான பிரதேச குழு மற்றும் கிராமிய குழு தல