மண்முனைப்பற்று மாவிலங்கு துறை பிரதேசத்தில் இடம்பெற்ற போதைப் பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு

போதைப் பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு இன்று மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாவிலங்கு துறை பிரதேசத்தில் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான கெளரவ பூபாலப்பிள்ளை பிரசாந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கினை மண்முனைப்பற்று பிரதேச செயலகம்  மற்றும் ஆற்றல் பேரவை இணைந்து ஏற்பாடுசெய்திருந்தது. இதன்போது அதிகரித்துவரும்  போதைப் பொருள் பாவனையை குறைப்பது தொடர்பாகவும், இளைஞர் சமுதாயத்தை அதிலிருந்து பாதுகாப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது பிரதேச செயலாளர் திரு சத்தியானந்தன்,காத்தான்குடி ஆதாரவைத்தியசாலையின் வைத்திய அதிகாரி திருமதி சுசிலா, மாவட்ட செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ,பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

ஏனைய செய்திகள்

Video

பரல் அமைப்பினரின் ஏற்பாட்டில் பெண் அரசியல் தலைமைத்துவங்களுக்கான பயிற்சிகளை முடித்துக் கொண்ட

தெற்காசிய கராத்தே சுற்றுப் போட்டியில் ( Kumite / fighting ) வெள்ளிப் பதக்கத்தை வென்று எமது மண்ணிற

கடந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட ''மாவட்டத்தின் உற்பத்தி மற்றும் விவசா

மட்டக்களப்பு கல்வி வலயமானது க. பொ.

மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட A வலயத்திற்கான பிரதேச குழு மற்றும் கிராமிய குழு தல