பழைய மாணவர்களை ஒருங்கிணைப்புச் செய்யும் முகமாக பேத்தாழை விபுலானந்தா கல்லூரியில்

பழைய மாணவர்களை ஒருங்கிணைப்புச் செய்யும் முகமாக பேத்தாழை விபுலானந்தா கல்லூரியில் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வுகளில் அப்பாடசாலையின் பழைய மாணவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைத்திருந்தார்.

இதன் போது மென்பந்து மற்றும் எல்லை விளையாட்டு போட்டிகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

அநேகருக்கு தெரிந்திருக்கும் கௌரவ தலைவர் சிவ. சந்திரகாந்தன் தரம் 01 தொடக்கம் 08 வரை பேத்தாழை விபுலானந்தா கல்லூரியிலும் அதன் பின்னர் வாழைச்சேனை இந்துக்கல்லூரியிலும் இணைந்து தனது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார், அக்காலப்பகுதியிலேயே நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்ப சூழ்நிலை காரணமாக தனது 16 வயதில் குழந்தைப் போராளியாக விடுதலை புலிகள் அமைப்பிலே இணைந்ததன் மூலம் அவரது பாடசாலை பயணமும் முடிவிற்கு வந்தது.

Video

ஏனைய செய்திகள்

Video

பரல் அமைப்பினரின் ஏற்பாட்டில் பெண் அரசியல் தலைமைத்துவங்களுக்கான பயிற்சிகளை முடித்துக் கொண்ட

தெற்காசிய கராத்தே சுற்றுப் போட்டியில் ( Kumite / fighting ) வெள்ளிப் பதக்கத்தை வென்று எமது மண்ணிற

கடந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட ''மாவட்டத்தின் உற்பத்தி மற்றும் விவசா

மட்டக்களப்பு கல்வி வலயமானது க. பொ.

மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட A வலயத்திற்கான பிரதேச குழு மற்றும் கிராமிய குழு தல