மாவட்டத்தின் நீச்சல் பயிற்சி, கராத்தே மற்றும் கால்பந்தாட்ட விளையாட்டுக்கள் தொடர்பிலான விசேட களவிஜயம் - தேசிய ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவர் திரு சுரேஷ் சுப்பிரமணியம்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த தேசிய ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவர் திரு சுரேஸ் சுப்ரமணியம் அவர்கள் கட்டுமுறிவு பாடசாலைக்கான விஜயத்தினை தொடர்ந்து மட்டக்களப்பில் இடம்பெறுகின்ற  நீச்சல் பயிற்ச்சிகளை பார்வையிடும் முகமாக மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்திற்கு சென்று அங்குள்ள பயிற்றுவிப்பாளர் சோமஸ்கந்தன் அவர்களுடன் கலந்துரையாடி அங்கு இடம்பெறுகின்ற பயிற்சிநெறிகளை அவதானித்ததுடன் பயிற்சிபெறும் வீரர்களை மாகாண மற்றும் தேசிய ரீதியில் வெற்றி பெறச் செய்வதிலுள்ள சவால்கள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக கராத்தே விளையாட்டு துறையில் பல சாதனைகளை வீரர்கள் தேசிய மற்றும் மாகாண ரீதியில் புரிந்து வருகின்ற நிலையில் அவ் வீரர்களுக்கு வழங்கப்படும் விளையாட்டு பயிற்ச்சிகள் தொடர்பிலும் ஆராய்ந்து அதிலுள்ள  குறைநிறைகள் தொடர்பிலும் ஆலோசனை வழங்கியிருந்தார்.

தொடர்ந்து மண்முனை மேற்கு அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலய மகளிர் பிரிவில் இம்முறை உதைப்பந்தாட்ட போட்டியில் மாகாண மட்டத்தில் சாதனை புரிந்த மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திரிந்ததோடு.  அம் மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு தேவைகள் பாதணி வசதிகள் மற்றும் சீருடை வசதிகள், உபகரணங்கள் சத்துணவு தொடர்பிலும் கேட்டறிந்து தன்னாலான உதவிகளை விரைவாக முன்னெடுப்பதாக தெரிவித்திருந்தார்.

இதன்போது தேசிய டெனிஸ் சம்மேளனத்தின் மாகாண இணைப்பாளர் திரு ஜோ. பாரதி அவர்கள்,  மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பிரதி மேயர் திரு ஜோர்ஜ் பிள்ளை அவர்கள் , தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் திரு S.சுரேஷ்குமார் அவர்கள், விளையாட்டு உத்தியோகத்தரான திருமதி K .சங்கீதா அவர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஏனைய செய்திகள்

Video

பரல் அமைப்பினரின் ஏற்பாட்டில் பெண் அரசியல் தலைமைத்துவங்களுக்கான பயிற்சிகளை முடித்துக் கொண்ட

தெற்காசிய கராத்தே சுற்றுப் போட்டியில் ( Kumite / fighting ) வெள்ளிப் பதக்கத்தை வென்று எமது மண்ணிற

கடந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட ''மாவட்டத்தின் உற்பத்தி மற்றும் விவசா

மட்டக்களப்பு கல்வி வலயமானது க. பொ.

மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட A வலயத்திற்கான பிரதேச குழு மற்றும் கிராமிய குழு தல