வாகரை கட்டுமுறிவு ஆண்டாள்குளம் அ.த.க வித்தியாலயத்திற்கு விஜயம் செய்த தேசிய ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவர் திரு சுரேஸ் சுப்ரமணியம் அவர்கள்

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் ,கிழக்கின் முதல் முதலமைச்சருமான கெளரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின்  முன்மொழிவிற்க்கமைவாக நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்த தேசிய ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவர் திரு சுரேஸ் சுப்ரமணியம் அவர்கள் மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு வாகரை கட்டுமுறிவு ஆண்டாள்குளம் அ.த.க  வித்தியாலயத்திற்கு விஜயம் செய்து அங்கு போதிய வசதிகளோ போதிய பயிற்ச்சிகளோ இன்றி உதைப்பந்தாட்ட போட்டியில் பங்கேற்று மாகாண ரீதியாக சாதனை புரிந்த மாணவிகளையும் அதற்க்கு உறுதுணையாக இருந்த அதிபர் மற்றும் ஆசிரியர்களையும் சந்தித்து பாராட்டியதுடன் அவர்களின் குறைநிறைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

உதைப்பந்தாட்ட போட்டியில் தேசிய மட்டம் செல்லவுள்ள அப்பாடசாலை மாணவிகளை மிக விரைவாக தலைநகரான கொழும்பிற்க்கு அழைத்து அங்கு தேசிய மட்டத்திலான விசேட பயிற்சிகளை முன்னெடுக்க தேவையான வசதிகளையும், அவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களையும் ஒழுங்கு செய்து தருவதாகவும் தேசிய ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவர் தெரிவித்திருந்தார்.

அத்துடன் அப் பாடசாலையில் கல்வி பயிலும் நீச்சல் திறமையுடைய  மாணவர்களின் திறமைகளும்  கட்டுமுறிவு குளத்தில் வைத்து ஆராய்ந்ததுடன் அவர்களின் திறமைகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாக தெரிவித்துதிருந்தார்.

குறித்த கள விஜயத்தின் போது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர்  கெளரவ 
 பூபாலப்பிள்ளை பிரசாந்தன் அவர்கள் , தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் திரு S.சுரேஷ்குமார் அவர்கள், கோரளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் திருமதி சோபா ஜெயரஞ்சித் அவர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

ஏனைய செய்திகள்

Video

பரல் அமைப்பினரின் ஏற்பாட்டில் பெண் அரசியல் தலைமைத்துவங்களுக்கான பயிற்சிகளை முடித்துக் கொண்ட

தெற்காசிய கராத்தே சுற்றுப் போட்டியில் ( Kumite / fighting ) வெள்ளிப் பதக்கத்தை வென்று எமது மண்ணிற

கடந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட ''மாவட்டத்தின் உற்பத்தி மற்றும் விவசா

மட்டக்களப்பு கல்வி வலயமானது க. பொ.

மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட A வலயத்திற்கான பிரதேச குழு மற்றும் கிராமிய குழு தல