24.2 மில்லியன் ரூபா செலவில் 1000 மீற்றர் நீளமான ஊரியன்கட்டு வெள்ளடிமடு வீதிக்கான ஆரம்பவேலைகள்.

24.2 மில்லியன் ரூபா செலவில் 1000 மீற்றர் நீளமான ஊரியன்கட்டு வெள்ளடிமடு வீதிக்கான ஆரம்பவேலைகள். கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகளின் தொடர்ச்சியாக நேற்றையதினம் கோறளைப்பற்று வடக்கு வாகரை ஊரியன்கட்டு கிராமத்தில் 24.2 மில்லியன் ரூபா செலவில் 1000 மீற்றர் நீளமான வெள்ளடிமடு வீதிக்கான ஆரம்பவேலைகளை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவருமான கௌரவ. சிவநேசதுரை சந்திரகாந்தனவர்கள் வைபவரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைத்திருந்தார். குறித்த நிகழ்வுகளின் போது கோரளைப்பற்று வடக்கு வாகரை தவிசாளர் கௌரவ. கண்ணப்பன் கணேசன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் லிங்கேஸ்வரன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் மானுதாசன் உட்பட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள், கிராமிய குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களென பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

சித்தாண்டி வந்தாறுமூலை பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களின் பிரதான வடிசல் வாய்க்காலாக திகழும் செம்பித்

இன்றைய சிறார்கள் எதிர்கொள்ளும் சவால்களாக பொருளாதாரம் மற்றும் போசாக்கின்மை போன்றன காணப்படுகின்ற போ

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் ,கிழக்கின் முதல் முதலமைச்சருமான கெளரவ சிவநேசதுரை