கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பேத்தாளை கிராமத்தில் புதிய கைத்தறி தொழிற்பயிற்சி நிலையம்.

கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பேத்தாளை கிராமத்தில் புதிய கைத்தறி தொழிற்பயிற்சி நிலையம்.

சுயபொருளாதாரம் மற்றும் உள்ளூர் உற்பத்தி போன்றவற்றை மேம்படுத்த வேண்டும் என்கின்ற கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக பல வேலைத்திட்டங்களை நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்டஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தனவர்கள் மாவட்டத்தின் பல பாகங்களிலும் பரவலாக முன்னெடுத்து வருகின்றார். அதனடிப்படையில் கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலும் இனம்காணப்பட்ட வறிய மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களை சேர்ந்த கைத்தறி நெசவு உற்பத்தியில் ஆர்வமுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு தேவையான பயிற்சி நெறிகளையும் சுய தொழில் வாய்ப்பினையும் உருவாக்கிக் கொடுப்பதனை நோக்கமாகக் கொண்டு மாகாண கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி நிறுவனத்தின் ஊடாக கைத்தொழில் பயிற்சி நிலையம் ஒன்றினை உருவாக்கியுள்ளார்.

இதற்கென ஆரம்ப கட்டமாக இரண்டு மில்லியன் ரூபா நிதியினை தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியினூடாக ஒதுக்கியுள்ளதுடன் இப்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறுவோருக்கு அவர்களது பயிற்சி காலம் நிறைவுறும் தருவாயில் வீட்டில் இருந்தவாறே தமது கைத்தறி நெசவு உற்பத்தி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கும் வண்ணமாக தேவையான உபகரணங்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளார். அத்துடன் எதிர்காலத்தில் இப்பயிற்சி நிலையத்தின் ஊடாக அதிகமான கைத்தறி நெசவு உற்பத்தியாளர்களை உருவாக்க தேவையான நடவடிக்கிகளையும் திட்டமிட்டுள்ளார்.

Video

ஏனைய செய்திகள்

Video

சித்தாண்டி வந்தாறுமூலை பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களின் பிரதான வடிசல் வாய்க்காலாக திகழும் செம்பித்

இன்றைய சிறார்கள் எதிர்கொள்ளும் சவால்களாக பொருளாதாரம் மற்றும் போசாக்கின்மை போன்றன காணப்படுகின்ற போ

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் ,கிழக்கின் முதல் முதலமைச்சருமான கெளரவ சிவநேசதுரை