கிராமிய உற்பத்தி பொருளாதாரத்தை மேம்படுத்தும் பகிரங்க சந்தை விற்பனை.

கிராமிய உற்பத்தி பொருளாதாரத்தை மேம்படுத்தும் பகிரங்க சந்தை விற்பனை.

''கொவிட் 19 தொற்று நிலைமைகளினால் சிதைக்கப்பட்டுள்ள கிராமப்புற மக்களின் வாழ்வாதாரங்களை புத்துயிரளித்து கிராமிய உற்பத்தி பொருளாதாரத்தை வலுப்படுத்துவதனூடாக தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தல்'' எனும் அரசின் உயரிய நோக்கத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பல வேலைத்திட்டங்களை நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்டஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தனவர்கள் முன்னெடுத்து வருகின்றார்.

அந்த வகையில் மாவட்டம் பூராகவும் பல உற்பத்தி கிராமங்களை உருவாக்கி அதற்கான சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளையும் ஒழுங்கு செய்து வழங்கிவருகின்றார். அதன் ஒரு அங்கமாக பசுமையான புற்தரைகளையும் மேட்டுநிலங்களையும் கொண்ட கிரான் திகிலிவெட்டை பிரதேசத்தில் அவரது தூரநோக்கு சிந்தனையில் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கால்நடை உற்பத்தி கிராமத்திலிருந்து வெற்றிகரமாக வளர்த்தெடுக்கப்பட்ட நாட்டு சேவல்கள் மற்றும் ஆடுகளுக்கான மாபெரும் பகிரங்க சந்தை விற்பனை நிகழ்வு அண்மையில் புலிபாய்ந்தகல் பிரதேசசெயலகத்திற்கு அருகாமையில் கௌரவ தலைவர் சந்திரகாந்தனவர்கள் தலைமையில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.

இதன்மூலம் தரமான நியாய விலையில் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திகளை தொடர்ச்சியாக சந்தைப்படுத்த முடிவதுடன் அதிக லாபத்தினையும் பெற்றுக்கொள்ளமுடியும். குறித்த நிகழ்வுகளின்போது கோறளைப்பற்று தவிசாளர் கௌரவ திருமதி. சோபா ஜெயரஞ்சித், கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் ராஜ்பாபு உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள், கொள்வனவாளர்கள் விற்பனையாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Video

ஏனைய செய்திகள்

Video

சித்தாண்டி வந்தாறுமூலை பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களின் பிரதான வடிசல் வாய்க்காலாக திகழும் செம்பித்

இன்றைய சிறார்கள் எதிர்கொள்ளும் சவால்களாக பொருளாதாரம் மற்றும் போசாக்கின்மை போன்றன காணப்படுகின்ற போ

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் ,கிழக்கின் முதல் முதலமைச்சருமான கெளரவ சிவநேசதுரை