வறுமைக் கோட்டின் கீழ் வாழும் வீடுகள் இல்லாத குடும்பங்களுக்கான 16 வீடுகள் அமைப்பதற்கான காசோலைகள்.

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் வீடுகள் இல்லாத குடும்பங்களுக்கான 16 வீடுகள் அமைப்பதற்கான காசோலைகள். அனைவருக்கும் தெரிந்திருக்கும் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலக பிரிவானது யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டு பின்தங்கிய நிலையில் காணப்படும் ஒரு பிரதேச செயலகமாகும். அந்த வகையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்டஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தன் அவர்கள் பல வேலைத்திட்டங்களை அப்பகுதியின் முன்னேற்றத்திற்காகவும் நலிவடைந்து காணப்படும் அம் மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் முகமாகவும் முன்னெடுத்து வருகின்றார். அதற்கமைய நேற்றைய தினம் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான 16 வீடுகளை அமைப்பதற்கான ஆரம்பகட்ட காசோலைகளை கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைத்திருந்தார். குறித்த நிகழ்வுகளின் போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன், கோறளைப்பற்று வடக்கு வாகரை தவிசாளர் கௌரவ கண்ணப்பன் கணேஷன், ஏறாவூர் பற்று பிரதேசசபை உறுப்பினர் கௌரவ அருந்திருநாவுக்கரசு, தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மாவட்ட சிரேஷ்ட முகாமையாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், துறை சார் அதிகாரிகள் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் ,கிழக்கின் முதல் முதலமைச்சருமான கெளரவ சிவநேசதுரை

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்தக்கூட்டம் தமிழ்

ஆட்சியாளர்களை நாம் ஆதரிப்பது பிரதேசத்தி்ல் தமிழர்களின் நலனுக்காகவே தவிர தனிப்பட்ட சொத்து சுகம் சே

பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜிற்கு எதிராக பெண்கள் ஒன்றியம் இணைந்து நடாத்திய பாரிய கண்