கோவில்கள், தேவாலயங்கள், பொது அமைப்புகள், விளையாட்டு கழகங்கள், போன்றவற்றிற்கான உதவித் திட்டங்கள்.

கோவில்கள், தேவாலயங்கள், பொது அமைப்புகள், விளையாட்டு கழகங்கள், போன்றவற்றிற்கான உதவித் திட்டங்கள்.

அனைவருக்கும் தெரிந்திருக்கும் எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமாகிய சிவநேசதுரை சந்திரகாந்தனவர்கள் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியினூடாக மாவட்டத்தின் பல பாகங்களிலுமுள்ள கோவில்கள், தேவாலயங்கள், பொது அமைப்புகள், விளையாட்டு கழகங்கள், போன்றவற்றிற்கான உதவித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். அதிலும் குறிப்பாக சுயபொருளாதாரம் மற்றும் உள்ளூர் உற்பத்தியினை ஊக்குவிக்கும் முகமாக விசேடமாக வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்கள் மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் போன்றவற்றிற்கான வாழ்வாதார உதவி திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றார். அந்த வகையில் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கோவில்கள் மற்றும் தேவாலயங்களுகான காசோலைகளை அண்மையில் கிரான் பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைத்திருந்தார்.

அத்துடன் போரதீவுபற்று மற்றும் கோறளைப்பற்று ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் எமது கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் மூலமாக விளையாட்டுக் கழகங்களுக்கான உபகரணங்கள் மற்றும் கோவில்கள் தேவாலயங்களுக்கான காசோலைகள், வாழ்வாதார உதவித்திட்டங்கள் போன்றவற்றினையும் வழங்கி வைத்திருந்தார்.

குறித்த நிகழ்வுகளின் போது குறித்த பிரதேசசெயலகங்களை சேர்ந்த பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள் உள்ளிட்ட அரசாங்க உத்தியோகஸ்தர்களும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Video

ஏனைய செய்திகள்

Video

சித்தாண்டி வந்தாறுமூலை பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களின் பிரதான வடிசல் வாய்க்காலாக திகழும் செம்பித்

இன்றைய சிறார்கள் எதிர்கொள்ளும் சவால்களாக பொருளாதாரம் மற்றும் போசாக்கின்மை போன்றன காணப்படுகின்ற போ

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் ,கிழக்கின் முதல் முதலமைச்சருமான கெளரவ சிவநேசதுரை