வாழ்வாதார மற்றும் பொது அமைப்புக்களுக்கான உதவித்திட்டங்கள்.

வாழ்வாதார மற்றும் பொது அமைப்புக்களுக்கான உதவித்திட்டங்கள்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரக்காந்தனவர்களால் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியின் மூலமாக 27/10/2021 அன்று மண்முனை பற்று பிரதேச செயலகப் பிரிவிலும் 28/10/2021 அன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலும் சுயதொழில் மற்றும் உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்தும் முகமாக சௌபாக்கிய உற்பத்திக் கிராம நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட ஆர்வமுள்ள உற்பத்தியாளர்களுக்கான உத்தியோகபூர்வ உற்பத்தி சான்றிதழ்களையும், தேவையான உபகரணங்களையும் வளங்கி வைத்திருந்தார்.

அத்துடன் குறித்த பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட கோவில்கள் மற்றும் தேவாலயங்களின் புனரமைப்பிற்கனா காசோலைகளையும் வழங்கி வைத்திருந்ததுடன் தெரிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்களையும் வழங்கி வைத்துதிருந்தார்.

குறித்த நிகழ்வுகளின் போது அந்தந்த பிரதேசசெயலகங்களின் பிரதேசசெயலாளர்கள் மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் துறைசார் அதிகாரிகள் பயனாளிகள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Video

ஏனைய செய்திகள்

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் ,கிழக்கின் முதல் முதலமைச்சருமான கெளரவ சிவநேசதுரை

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்தக்கூட்டம் தமிழ்

ஆட்சியாளர்களை நாம் ஆதரிப்பது பிரதேசத்தி்ல் தமிழர்களின் நலனுக்காகவே தவிர தனிப்பட்ட சொத்து சுகம் சே

பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜிற்கு எதிராக பெண்கள் ஒன்றியம் இணைந்து நடாத்திய பாரிய கண்