கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியினூடாக துரித வேலை திட்டங்கள்.

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியினூடாக துரித வேலை திட்டங்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனவர்கள் தனக்காக ஒதுக்கப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதியினை பயன்படுத்தி மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட களுதாவளை விளையாட்டுக் கழகத்திற்கான எல்லை விளையாட்டு உபகரணங்களையும், கோட்டைக்கல்லாறு விநாயகர் விளையாட்டுக் கழகத்திற்கான கிரிக்கெட் மென்பந்து உபகரணங்களையும், கோட்டைக்கல்லாறு திருவள்ளுவர் பாடசாலைக்கான போட்டோ கொப்பி இயந்திரம் மற்றும் அச்சு இயந்திரம் போன்றவற்றினையும் வழங்கி வைத்துள்ளார்.

அத்துடன் குறித்த மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட குறுமன்வெளி விளையாட்டு மைதானத்திற்கான மின்விளக்குகள் பொருத்துகின்ற திட்டத்தினையும் அதேபோன்று விருட்சம் சமூக மேம்பாட்டு அமைப்பிற்கான கணினி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தினையும் அமல்படுத்தியுள்ளார்.

மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச ஒருங்கிணைப்புகுழு தலைவரின் இணைப்பாளர் தம்பிராஜா தஜீவரன் தலைமையில் ஒழுங்குசெய்யப்பட்ட குறித்த நிகழ்வுகளின்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி வில்வரெத்தினம் சிவப்பிரியா மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சின் பொதுச்செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன், பிரதி செயலாளர் ஜெ. ஜெயராஜ், மாவட்டஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவரின் கல்வி இணைப்பாளர் ஆசிரியர் கே கே அரஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Video

ஏனைய செய்திகள்

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் ,கிழக்கின் முதல் முதலமைச்சருமான கெளரவ சிவநேசதுரை

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்தக்கூட்டம் தமிழ்

ஆட்சியாளர்களை நாம் ஆதரிப்பது பிரதேசத்தி்ல் தமிழர்களின் நலனுக்காகவே தவிர தனிப்பட்ட சொத்து சுகம் சே

பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜிற்கு எதிராக பெண்கள் ஒன்றியம் இணைந்து நடாத்திய பாரிய கண்