முகத்துவாரம் தொடக்கம் சவுக்கடி வரையிலான 6.5 கிலோ மீட்டர் வீதி

முகத்துவாரம் தொடக்கம் சவுக்கடி வரையிலான 6.5 கிலோ மீட்டர் வீதிக்கான வேலைகளை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆரம்பித்து வைத்தார்.

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் என்ற வகையில் பல்வேறு வேலைத்திட்டங்களை இந்த கொரோனா காலப் பகுதியிலும் பலத்த சவால்களுக்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்னெடுத்து வருகின்றமை யாவரும் அறிந்த உண்மையே.

அதன் ஓர் அங்கமாக மட்டக்களப்பு முகத்துவாரம் தொடக்கம் சவுக்கடி வரையிலான 6.5 கிலோ மீட்டர் வரையான பாடுமீன் வீதியினை கடந்த 30/06/2021 அன்று அவர் ஆரம்பித்து வைத்திருந்தார். குறிப்பாக இதன் மூலம்அப்பகுதியில் உள்ள மீன்பிடியினை நம்பி வாழும் மக்கள் தமது பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் தமது சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளை தங்குதடையின்றி மேற்கொள்வதனையும் மையமாகக் கொண்டே இந்த வேலைத் திட்டத்தினை முன்னெடுத்துள்ளார்.

இதன் மூலம் பல நன்மைகளை அங்குள்ள மக்களும் மீனவ சமுதாயமும் அடையும் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம்.

Video

ஏனைய செய்திகள்

Video

சித்தாண்டி வந்தாறுமூலை பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களின் பிரதான வடிசல் வாய்க்காலாக திகழும் செம்பித்

இன்றைய சிறார்கள் எதிர்கொள்ளும் சவால்களாக பொருளாதாரம் மற்றும் போசாக்கின்மை போன்றன காணப்படுகின்ற போ

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் ,கிழக்கின் முதல் முதலமைச்சருமான கெளரவ சிவநேசதுரை