மாவடிமுன்மாரி, விடுதிக்கள் கிராமத்தின் மயான பிரச்சனைக்கு விரைவில் தீர்வு

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விடுதிக்கள் கிராமத்தில் மயானம் ஒன்று இல்லாத காரணத்தினால் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றமை தொடர்பாக த. ம. வி.புலிகள் கட்சியின் மாவடி முன்மாரி கிராமிய குழுத்தலைவர் திரு. தங்கத்துரை அவர்களால் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து, மேற்படி விடயம் தொடர்பில் ஆராந்து தீர்வை பெற்றுக் கொடுக்குமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.

இதன்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கௌரவ செயலாளர் பூ. பிரசாந்தன் ம. தெ. மே பிரதேச சபை உறுப்பினர் ம.குகநாதன், த.ம. வி. பு. கட்சியின் பட்டிப்பளை பிரதேச தலைவர் இ.ரமேஷ், கிராமிய குழுக்களின் தலைவர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.

இதன்போது மேற்படி கிராமத்தில் காணப்படும் கழிவு முகாமைத்துவ நிலையத்தின் குறைபாடுகள் தொடர்பாக கிராம மக்களால் கௌரவ செயலாளர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இது தொடர்பில் பிரதேச சபையின் தவிசாளர் அவர்களிடம் நேரடியாக தொடர்புகொண்டு விடயம் தொடர்பில் கேட்டறிந்த போது, கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கான நவீன இயந்திர வசதிகளின் தேவைப்பாடுகள் தொடர்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது .

எனவே இது தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர் கௌரவ சிவ. சந்திரகாந்தன் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச்சென்று, மேற்படி கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கு நவீன இயந்திர வசதிகள் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதுடன். சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன.

Video

ஏனைய செய்திகள்

Video

சித்தாண்டி வந்தாறுமூலை பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களின் பிரதான வடிசல் வாய்க்காலாக திகழும் செம்பித்

இன்றைய சிறார்கள் எதிர்கொள்ளும் சவால்களாக பொருளாதாரம் மற்றும் போசாக்கின்மை போன்றன காணப்படுகின்ற போ

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் ,கிழக்கின் முதல் முதலமைச்சருமான கெளரவ சிவநேசதுரை