தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் டென்மார்க் நாட்டிற்கான புகலிடக்கிளை இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது

தாயகத்தில் வாழும் எம் இனத்தின் இருப்பினையும் அரசியல் பலத்தினையும் உறுதிப்படுத்தும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அடுத்த கட்ட பயணமாக வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் புகலிட உறவுகளிடையே கட்சிக்கொள்கையினையும், பணிகளையும் விரிவுபடுத்தி அவர்களின் ஆதரவுகளையும், ஆலோசனைகளையும் பக்கபலமாக கொண்டு எமது சமூகத்தின் வளமான எதிர்கால சந்ததியினை கட்டியெழுப்பும் முயற்சியின் முதற்கட்டமாக ஐரோப்பிய தேசங்களுள் ஒன்றாகிய டென்மார்க் நாட்டிற்கான புகலிடக்கிளை அங்குரார்ப்பன நிகழ்வு இன்றைய தினம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்டஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தனவர்கள் தலைமையில் ஜூம் காணொளி மூலமாக இடம்பெற்றது.

குறித்த டென்மார்க் நாட்டின் புகலிடக்கிளை பிரதம ஒருங்கிணைப்பாளராக தர்மேந்திரன் முத்துக்குமார் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் கௌரவ சிவநேசத்துரை சந்திரகாந்தனவர்கள் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

குறித்து நிகழ்வுகளின்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன், மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அயலக உறவு பணிப்பாளரும் ஊடக செயலாளருமான மதி குமாரதுரை, கட்சியின் அரசியல் ஆலோசகர் ஸ்டாலின் ஞானம் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மிக விரைவில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஏனைய ஐரோப்பிய, கனேடிய, அமெரிக்க, மத்தியகிழக்கு நாடுகளுக்கான புகலிடக்கிளை அங்குரார்ப்பன நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Video

ஏனைய செய்திகள்

Video

சித்தாண்டி வந்தாறுமூலை பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களின் பிரதான வடிசல் வாய்க்காலாக திகழும் செம்பித்

இன்றைய சிறார்கள் எதிர்கொள்ளும் சவால்களாக பொருளாதாரம் மற்றும் போசாக்கின்மை போன்றன காணப்படுகின்ற போ

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் ,கிழக்கின் முதல் முதலமைச்சருமான கெளரவ சிவநேசதுரை