கொரோன சிகிச்சை நிலையம் அமைக்க தமது திருச்சபைக்கு சொந்தமான உடைமைகளை பயன்படுத்துமாறு அருட்தந்தை சகாயநாதன்.

மனிதன் மரித்தாலும் மனிதநேயம் மரித்து போய்விடக்கூடாது என்பதற்கமைய இயேசுசபையின் அருட்தந்தை சகாயநாதன் கௌரவ தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களுக்கு ஒரு கோரிக்கையினை விடுத்திருந்தார். அதில் தற்போழுது நாட்டில் அதிகரித்துவரும் கொரோன நோய்த்தாக்கத்தினால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கான சிகிச்சை நிலையங்களை அமைப்பதற்காக கல்குடாவில் காணப்படும் தமது தியானபீடம், ஒன்றுகூடல் மண்டபம் மற்றும் மூலிகை வைத்திய நிலையம் போன்றவற்றை பயன்படுத்துமாறு கோரியிருந்தார்.

அதனடிப்படையில் நேற்றையதினம் அவ்விடத்திற்க்கு விஜயம் செய்த கௌரவ தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அங்குள்ள நிலைமைகளையும் வசதிகளையும் அவதானித்திருந்தார். அதன்போது அருட்தந்தையவர்கள் மேலும் தெரிவிக்கையில் அவ்விடத்தில் மேலதிக வசதிகள் தேவைப்படின் தற்காலிக கட்டிடங்களையும், கூடாரங்களையும் அமைத்து தருவதற்கு தாம் தயாராகவுள்ளதாகவும் தேவைப்படின் மட்டக்களப்பில் அமைந்துள்ள தமது மன்ரேசா நிலையத்தினையும் பயன்படுத்துமாறு கோரியிருந்தார்.

அதன்போது கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி ஸ்டீவ் சஞ்சீவ் அவர்களும் சென்றிருந்தார். எனினும் தற்போதுள்ள சூழ்நிலையில் தாதிகயர்கள் மற்றும் சிற்றூழியர்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக கொரோனா சிகிச்சை நிலையங்கள் வைத்தியசாலைகளுடன் இணைந்ததாகவே இயங்கிவருகின்ற காரணத்தினால் எதிர்காலத்தில் நோயாளர்கள் அதிகரிக்கின்ற பட்சத்தில் இயேசுசபைக்கு சொந்தமான அந்த இடங்களை பயன்படுத்துவதற்கான முடிவுகளும் அவ்விடத்தில் அருட்தந்தையவர்களுடன் எட்டப்பட்டிருந்தது.

Video

ஏனைய செய்திகள்

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் ,கிழக்கின் முதல் முதலமைச்சருமான கெளரவ சிவநேசதுரை

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்தக்கூட்டம் தமிழ்

ஆட்சியாளர்களை நாம் ஆதரிப்பது பிரதேசத்தி்ல் தமிழர்களின் நலனுக்காகவே தவிர தனிப்பட்ட சொத்து சுகம் சே

பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜிற்கு எதிராக பெண்கள் ஒன்றியம் இணைந்து நடாத்திய பாரிய கண்