நீரியல்சார் வளங்கள் தொடர்பான உற்பத்தி மற்றும் ஏற்றுமதி போன்றவற்றை மேம்படுத்தல்...

நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் அழைப்பினை ஏற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்த மீன்பிடித்துறை இராஜாங்க அமைச்சர் கௌரவ கஞ்சன விஜேசேகர அவர்களுடன் இணைந்து எமது மாவட்டத்திலுள்ள நீரியல்சார் வளங்களை பயன்படுத்தி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை முன்னெடுத்தல், புதிய துறைமுகங்கள் மற்றும் இறங்குதுறைகள் போன்றவற்றினை அமைத்தல் . இதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பொருளாதார நிலைமையையும் மக்களின் வாழ்க்கைத் தரத்தினையும் மேம்படுத்துதல் என்பன தொடர்பாக மாவட்டத்தின் பல பகுதிகளாகிய வாகரை, பனிச்சங்கேணி, கொக்கட்டிச்சோலை, கிரான்குளம் உள்ளிட்ட இடங்களுக்கான களவிஜயத்தினை நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது ஒவ்வொரு பிரதேசங்களிலும் காணப்படும் நீர் வளங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் இவற்றை பயன்படுத்தி எவ்வாறு எமது சமூகத்தினை பொருளாதாரத்தில் மேம்பட்ட சமூகமாக மாற்றுவது என்பது தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன் அனைவருக்கும் தெரிந்திருக்கும் கடந்த காலமாக முதலைக்குடா மற்றும் மகிழடித்தீவு ஆகிய பகுதிகளில் எமது மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் தலைமையின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் சுமார் 380 ஏக்கர் நிலப்பரப்பினை கொண்ட இறால் வளர்ப்பு திட்டத்தினை விரைவு படுத்துவது தொடர்பாகவும், மாவட்டத்தில் இயற்கையாக அமையப்பெற்ற சில பகுதிகளாகிய கோட்டைக்கல்லாறு, களுவன்கேணி, வாழைச்சேனை போன்ற பகுதிகளில் புதிய துறைமுகங்கள் மற்றும் இறங்கு துறைகள் அமைத்தல் தொடர்பாகவும், எமது மீனவர்களுக்கு மீன்பிடி தொடர்பான நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்களை அறிமுகம் செய்தல் தொடர்பாகவும், கடல் சார் உற்பத்தி தொடர்பான தொழிற்சாலைகளை நிறுவுதல் போன்றவை தொடர்பான பல வேலைத்திட்டங்கள் கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் முன்மொழியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்விஜத்தின் போது கௌரவ இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் மற்றும் பல துறைசார் அதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Video

ஏனைய செய்திகள்

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் ,கிழக்கின் முதல் முதலமைச்சருமான கெளரவ சிவநேசதுரை

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்தக்கூட்டம் தமிழ்

ஆட்சியாளர்களை நாம் ஆதரிப்பது பிரதேசத்தி்ல் தமிழர்களின் நலனுக்காகவே தவிர தனிப்பட்ட சொத்து சுகம் சே

பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜிற்கு எதிராக பெண்கள் ஒன்றியம் இணைந்து நடாத்திய பாரிய கண்