49 மில்லியன் ரூபா செலவில் 2000m நீளமான சொறுவாமுனை கொங்கிறீட் வீதி.

கிராமங்களின் உள்ளூர் உற்பத்தி சுய தொழில் போன்றவற்றை மேம்படுத்துதல் அதற்கான உட்கட்டமைப்புவசதிகளை விருத்தி செய்தல் போன்ற எமது தேர்தல் விஞ்ஞாபனத்திற்கிணங்க கிராமங்கள் தோறும் பல அபிவிருத்தி திட்டங்களை இந்த கொரோனா காலத்திலும் பல சவால்களுக்கு மத்தியில் முன்னெடுத்து வருகின்றோம். அதனடிப்படையில் வவுணதீவு சொறுவாமுனை தொடக்கம் விளாவெட்டுவான் வரையில் 49 மில்லியன் ரூபா செலவில் 2000 மீட்டர் நீளமான வீதியினை பெருந்தெருக்கள் அமைச்சின் ஊடாக இந்த மக்களுக்கு பெற்றுக்கொடுத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றோம். அந்த வகையில் கடந்த 30/ 07/ 2021 அன்று இவ்வீதியினை வைபவரீதியாக திறந்து மக்கள் பாவனைக்காக கையளித்துள்ளோம்.

இவ்வீதியினை பயன்படுத்தும் மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை இவ்வீதியினூடாக தங்கு தடையின்றி முன்னெடுக்க முடிவதுடன் தமது உற்பத்திகளை இலகுவாக எடுத்துச்சென்று அதற்கான சரியான நியாய விலையினையும் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்நிகழ்வின் போது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் சிவகுமார், பிரதம பொறியியலாளர் பரதன், மண்முனைமேற்கு பிரதேச செயலாளர் சுதாகர், பிரதேச அமைப்பாளர்கள், பிரதேசசபைஉறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

Video

ஏனைய செய்திகள்

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் ,கிழக்கின் முதல் முதலமைச்சருமான கெளரவ சிவநேசதுரை

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்தக்கூட்டம் தமிழ்

ஆட்சியாளர்களை நாம் ஆதரிப்பது பிரதேசத்தி்ல் தமிழர்களின் நலனுக்காகவே தவிர தனிப்பட்ட சொத்து சுகம் சே

பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜிற்கு எதிராக பெண்கள் ஒன்றியம் இணைந்து நடாத்திய பாரிய கண்