சுய உற்பத்தியாளர்களுக்கான நீர் பம்பிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள்.

கதிரவெளி கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட கல்லரிப்பு விவசாய கிராமத்திற்கு விஜயம் செய்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் சுய உற்பத்தியில் ஈடுபடும் முயற்சியாளர்களை ஊக்கப் படுத்தும் முகமாக தெரிவு செய்யப்பட்ட சுய உற்பத்தி மற்றும் விற்பனையாளர்களுக்கு நீர்பம்பிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் போன்றவற்றினை வழங்கி வைத்திருந்தார்.

அதன் பின்னர் நீடித்த மீள்குடியேற்றத்திற்கான உதவித் திட்டத்தின் கீழ் இலங்கை மற்றும் ஐக்கிய நாடுகள் இணைந்த செயற்திட்டத்தின் ஊடக காவியா பெண்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கரையோரப் பாதுகாப்பிற்கான மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டத்தினையும் ஆரம்பித்து வைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து வாகரை பிரதேசத்தில் உள்ள கிருமிச்சை மற்றும் மதுரம்கேணிக்குளம் போன்ற பகுதிகளுக்கும் விஜயம் செய்து அங்குள்ள மக்களை சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டறிந்துடன் அவற்றை நிவர்த்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரையும் விடுத்திருந்தார் அதனடிப்படையில் அப்பிரதேசத்தில் மிக விரைவாக தேவையான அத்தியாவசிய விடயங்கள் நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் பூர்த்தி செய்யப்படவுள்ளது.

Video

ஏனைய செய்திகள்

Video

சித்தாண்டி வந்தாறுமூலை பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களின் பிரதான வடிசல் வாய்க்காலாக திகழும் செம்பித்

இன்றைய சிறார்கள் எதிர்கொள்ளும் சவால்களாக பொருளாதாரம் மற்றும் போசாக்கின்மை போன்றன காணப்படுகின்ற போ

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் ,கிழக்கின் முதல் முதலமைச்சருமான கெளரவ சிவநேசதுரை