கும்பாபிஷேக நிகழ்வு மற்றும் இராமகிருஷ்ண மிஷனுக்கான விஜயம்

இன்றைய தினம் கட்சியின் கௌரவ தலைவர் மற்றும் கௌரவ பொதுச் செயலாளர், மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் கும்பாபிஷேக நிகழ்வுகளில் கலந்து கொண்டதுடன் இராமகிருஷ்ண மிஷனுக்கும் விஜயம் செய்திருந்தனர். இன்றைய தினம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கௌரவ சிவனேசத்துரை சந்திரகாந்தன், பொதுச்செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் க. கருணாகரன் ஆகியோர் மட்டக்களப்பு தாழங்குடா மஹா விஷ்ணு தேவஸ்தான ஆலயத்தின் கும்பாபிஷேக விசேட வழிபாட்டு நிகழ்வுகளில் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து கல்லடி ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷனுக்கு விஜயம் செய்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கௌரவ சந்திரகாந்தன் மற்றும் பொதுச் செயலாளர் கௌரவ பிரசாந்தன் ஆகியோர் சுவாமிகளிடம் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டதுடன் இராமகிருஷ்ண மிஷனின் எதிர்கால முன்னெடுப்புக்கள் தொடர்பாகவும் இராமகிருஷ்ண மிஷன் மூலமாக எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சமூக அபிவிருத்தி தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடியிருந்தனர்.

Video

ஏனைய செய்திகள்

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் ,கிழக்கின் முதல் முதலமைச்சருமான கெளரவ சிவநேசதுரை

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்தக்கூட்டம் தமிழ்

ஆட்சியாளர்களை நாம் ஆதரிப்பது பிரதேசத்தி்ல் தமிழர்களின் நலனுக்காகவே தவிர தனிப்பட்ட சொத்து சுகம் சே

பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜிற்கு எதிராக பெண்கள் ஒன்றியம் இணைந்து நடாத்திய பாரிய கண்