புனரமைக்கப்படும் குளங்கள், அணைக்கட்டுகள் மற்றும் நீர்ப்பாசன தொகுதிகள் போன்றவற்றிற்கான நேரடி களவிஜயம்.

காலபோக பயிர்செய்கை என்பது விவசாயிகளின் பொருளாதாரத்தை கட்டி எழுப்பும் முதுகெலும்பாக காணப்படுகின்ற ஒரு விடயம் என்பதனால் அந்த காலபோக பயிர்செய்கையினை அதிகரிக்கும் முகமாகவும் விவசாயிகளின் நலன் கருதியும் எமது மாவட்டத்தின் நீர்ப்பாசனத்தினை மேம்படுத்தும் முகமாகவும் நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் நீர்ப்பாசன செழுமை தேசிய வேலைத் திட்டத்திற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் புனரமைக்கப்படும் குளங்கள், அணைக்கட்டுகள் மற்றும் நீர்ப்பாசன தொகுதிகள் போன்றவற்றை துரிதப்படுத்துவது தொடர்பாகவும் புதிய குளங்கள், மற்றும் அணைக்கட்டுகள் போன்றவற்றை அமைப்பது தொடர்பாகவும் நேரடி கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் கிழக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் திருவாளர் நகரெத்தினம் உட்பட ஏனைய துறைசார் அதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Video

ஏனைய செய்திகள்

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் ,கிழக்கின் முதல் முதலமைச்சருமான கெளரவ சிவநேசதுரை

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்தக்கூட்டம் தமிழ்

ஆட்சியாளர்களை நாம் ஆதரிப்பது பிரதேசத்தி்ல் தமிழர்களின் நலனுக்காகவே தவிர தனிப்பட்ட சொத்து சுகம் சே

பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜிற்கு எதிராக பெண்கள் ஒன்றியம் இணைந்து நடாத்திய பாரிய கண்